குறுகிய காலத்தில் பல மில்லியன் மக்களை தன் பக்கம் இழுத்ததில் கூகிள்க்கு நிகர் கூகிள் தான், எளிமை, வேகம், புதுமை, பாதுகாப்பு இதுவே இதன் தாரக மந்திரம். ஏதாவது ஒன்றை கண்டு பிடித்தால் அதோடு நிறுத்திவிடாமல் மேலும் மேலும் அதில் புதிய உத்திகளை புகுத்துவது மாற்றம் செய்வது என்று அதன் ஆர்வம் சற்றும் குறையாமல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. கூகிள் அளவிற்கு பயனாளர்களுக்கு வசதியை செய்து கொடுப்பது போல வேறு எந்த நிறுவனமும் இல்லை.
மற்ற மின்னஞ்சல் (
இதை நீங்கள் கூகிள் மின்னஞ்சலில் Settings ஐ சொடுக்கினால் அதில் Labs என்று இருக்கும், அதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் இணைத்துக்கொள்ளுங்கள், அதில் சில முக்கியமானவை பற்றி நான் கூறுகிறேன்.
Inserting images: இதன் பயன் என்னவென்றால் படங்களை நமது விருப்பப்படி மின்னஞ்சல் அனுப்பும் போது அமைத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பார்வர்ட் மின்னஞ்சல்களுக்கு மிகவும் பயன் தரும். படத்தை பற்றி விளக்கம் பிறகு படம், இதே போல விளக்கங்கள் கூறி படங்களை இணைக்கலாம், இல்லை என்றால் மொத்த படங்களும் இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும் அதன் விளக்கங்கள் எதற்கு என்று தெரியாமல் அணிவகுத்து இருக்கும்.
Default 'Reply to all': ஒரு சிலர் குழுவாக (தனி குழும மின்னஞ்சல் இல்லாமல்) அடிக்கடி தனது நண்பர்களுக்குள் மின்னஞ்சல் செய்பவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இதை இணைத்தால் Reply to all என்பது வலது ஓரத்தில் மேலே வந்து விடும் (வழக்கமாக இருக்கும் Reply யும் இருக்கும்) இதனால் எளிதாக அனைவருக்கும் அனுப்பலாம்.
Hide Unread Counts: முன்பு தான் ஆடிக்கு ஒருநாள் அம்மாவாசைக்கு ஒரு நாள் மின்னஞ்சல் வரும், தற்போதெல்லாம் நண்பர்கள் மின்னஞ்சல், குழும மின்னஞ்சல், பல தளங்களில் சப்க்ரைப் செய்து இருந்தால் அந்த மின்னஞ்சல்கள் என ஏகப்பட்டது வருகிறது. இது எத்தனை வந்துள்ளது என்ற எண்ணிக்கை Inbox ல் தெரியும், இது உறுத்தலாக தெரிந்தால் இந்த எண்ணிக்கையை இதை இணைப்பதின் மூலம் மறைக்கலாம்.
Right-side chat : கூகிள் உரையாடியில் (Chat) மறைந்து இருக்கும் (Invisible Mode) வசதி இல்லை, ஆனால் கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் இது உள்ளது. இதனால் பலர் இந்த வசதியை பயன்படுத்த கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் தான் இணைந்து இருப்பார்கள். இது வழக்கமாக இடது புறத்தில் இருக்கும், அதனுடன் Lable கள் இருப்பதால் ரொம்ப கீழே இருக்கும். இதை தவிர்க்க இதை இணைத்தால் உரையாடி பகுதி வலது புறத்தில் மாறி விடும்.
Pictures in chat: இதை இணைப்பதின் மூலம் நம்முடன் உரையாடுபவர் படம் (அவர்கள் இணைத்து இருந்தால்) நமக்கு தெரியும்
Mark as Read Button: தேவையற்ற மின்னஞ்சல்கள் பல நமக்கு வரும் அல்லது அந்த மின்னஞ்சலில் என்ன இருக்கும் என்று முன்பே தெரியும் எனவே படிக்காத மின்னஞ்சல்களாக (Unread Mails) இருப்பது எரிச்சலை தரலாம் எனவே அவை அனைத்தையும் மொத்தமாக தேர்வு செய்து Mark as read பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்தும் படிக்கப்பட்ட மின்னஞ்சல்களாக (Read) மாறி விடும்.
Undo Send: இது மிகவும் பயனுள்ள ஒன்று, நாம் எப்போதும் அவசரக்காரர்கள் அதனால் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மாற்றி தவறுதலாக மற்ற ஒருவருக்கு அனுப்பி விடுவோம்.. அப்புறம் அடடா! வடை போச்சே! என்று மண்டை காய்வோம். இதற்கு தான் கூகிள் தரும் இந்த வசதி. நாம் மின்னஞ்சல் அனுப்பிய பிறகு அதை கூகிள் அனுப்பாமல் சில நொடிகள் வைத்து இருக்கும், அதற்குள் நம் தவறை உணர்ந்து விட்டால் Undo வை அழுத்துவதன் மூலம் அதை அனுப்பாமல் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment